- பாடவாரியாக பணி நிரவல் பட்டியல் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த தேதியை அடிப்படையாக கொண்டு தயாரிக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- பாடவாரியாக மாவட்டத்திலுள்ள காலி பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை பணியிடங்கள் கணக்கெடுக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- காலி பணியிடம் மற்றும் கூடுதல் தேவை பணியிடம் (Need post) எண்ணிக்கைக்குட்பட்டு மாவட்டத்திற்குள் மட்டும் பணி நிரவல் செய்ய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- பணி நிரவல் செய்ய இயலாத மீதமுள்ள பணியிடங்கள் அப்பள்ளியிலேயே தக்க வைக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- பணி நிரவல் பட்டியலில் மூதுரிமையில் (பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படை) இளையோரையே (Junior most) பணி நிரவல் செய்ய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலில் ஆசிரியர் நலன் காக்க தற்போது (இரவு 10.30 மணி) வரை மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
- அனைத்து மாவட்டங்களின் பணி நிரவல் பட்டியல் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நேரடி ஆய்விற்கு பிறகே இறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஆகவே எந்த ஆசிரியரும் இடை தரகர்கள் மூலமாகவோ வேறு சில அனுகூலங்களின் மூலமாகவோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்என உறுதியாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தெரிவிக்கிறது.
- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் நிகழ்ந்தால் அதனை உடனே மாநில தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- சுமார் 3500 பணி நிரவல் பணியிடங்களை மறு ஆய்வு செய்து 1500 பணியிடங்களாக குறைக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.








