Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
2016 ஜுலை ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் நடந்து கொண்டுள்ள தமிழக சட்டப்
பேரவையில் TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின்
கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து சுமார் மூவாயிரம்
ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு நீதி மன்ற
வழக்குகள் காரணமாக தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி
ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை மாணாக்கர்களின்
தேர்ச்சி விழுக்காடு மூலம் தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டினர்.
ஆயினும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில்
நடந்து கொண்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர்
அம்மா அவர்களால் ஒரு நல்ல விடியல் கிடைக்கும் என காத்துக் கொண்டு
இருக்கின்றனர்.
காரணம் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வெளிவந்த நாள் இதே ஆகஸ்டு 23 (2010)
தமிழகத்தில் 2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு இந்தவகை ஆசிரியர்களின் நிலையும் பணியும்....???
( கேள்விக்குறி )
என்பதை கடந்த பல நாட்களாக பல ஊடகங்கள் நினைவுபடுத்தி வருகின்றன.
23/08/2010 க்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன
சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த
ஆசிரியர்கள் இன்றும் ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி நியாயமாக
கிடைக்க வேண்டிய பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இன்றுவரை பணியாற்றி
வருகின்றனர்.
தமிழகத்தில் பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...
ஒரு சில ஆசிரியர்களுக்கு...
* வளரூதியம் இல்லை.
* ஊக்க ஊதியம் இல்லை.
* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.
* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.
* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.
* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.
* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.
* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.
* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.
* வரையறை விடுப்புகள் இல்லை.
₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.
இவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின்
மூத்த ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு
இல்லை.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கருணை உள்ளத்தோடு, இவர்களின்
பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும் நிலையில் 23/08/2010க்குப் பிறகு பணி
நியமனம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு அளிப்பது
மட்டுமே ஒரே தீர்வு.
இவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்த கொள்கை
முடிவில் மறு பரிசீலனை செய்து பணியில் உள்ள இந்த 3300 பட்டதாரி
ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து, ஒரு அரசாணை
பிறப்பிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் தனிப்
பிரிவில் கடந்த ஜனவரி மாதம் சுமார் ஐநூறு ஆசிரியர்கள் மனு கொடுத்து
இருந்தனர்.
முதன்மை அமைச்சர்களின் மேலான கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.
2016 ஜுலை ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் நடக்கும் சட்ட மன்றக் கூட்டத்
தொடரில் கல்வித் துறை சம்மந்தமான அறிவிப்புகளில் இந்த பணியில் உள்ள
நிபந்தனை ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழு விலக்கு தந்து அரசாணை
வெளிவரும் என எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்த சுமார் மூவாயிரம்
ஆசிரியர்களுக்கும் காத்து கொண்டு உள்ளனர்.
தமிழக அரசின் கல்வித் துறை அரசாணை 181 ன் அடிப்படையில் எதிர் வரும் நவம்பர்
15 (2016) அன்றைய தினத்திற்கு முன்பு இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வாக TET லிருந்து பணியில் உள்ள பட்டதாரி
ஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க தமிழக அரசு முன் வந்தால் சுமார் 3000
ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என பல்வேறு ஆசிரியர்
சங்கங்கள் தமிழக அரசிடம் கோரிக்கையை வைக்கின்றனர்.
இந்த சட்ட மன்ற கூட்டத்தில் நல்ல தீர்வினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
அம்மா அவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் இவ்வகை TET நிபந்தனை ஆசிரியர்கள்
செப்டம்பர் 5 ஆம் தேதி முழுமையான மன நிம்மதியுடன் ஆசிரியர் தினத்தைக்
கொண்டாடாடி மகிழ்வர்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








