Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளிபோனஸ்: தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்
வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மேலும், தமிழ்நாடு
அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887
தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் தீபாவளி போனஸாக வழங்கப்படுகிறது
என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட
அறிக்கையில்,'
'பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும்
தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும்
வகையில் 2015-16 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான்
உத்தரவிட்டுள்ளேன்.திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015இன் படி, போனஸ் பெற
தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 என மத்திய அரசால்
உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ரூ.10,000 என இருந்த தகுதி வரம்பை
தளர்வு செய்து அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் போனஸ் பெற
வழிவகை செய்யப்பட்டதைப் போலவே தற்போது ரூ.21,000 என்ற சம்பள உச்சவரம்பை
தளர்வு செய்து அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ்
வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.போனஸ் கணக்கிட ஏற்கெனவே ரூ.3,500 என இருந்த
மாதாந்திர சம்பள உச்ச வரம்பு திருத்திய போனஸ் சட்டம் 2015-ன் படி, 7000
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 2015-16ஆம் ஆண்டுக்கான
போனஸ் மற்றும் கருணை உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி,1. லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும்
தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய
உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67
விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும்
கருணைத் தொகை வழங்கப்படும்.
2. நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67
விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத்
தொகை வழங்கப்படும்.
3. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும்
தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67
விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத்
தொகை வழங்கப்படும்.
4. லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்தொழிலாளர்களுக்கு
போனஸ் மற்றும் கருணைத் தொகை மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய
உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும்
அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ்
மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.
5. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும்
கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு
பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்
தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்
.6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும்'சி' மற்றும் 'டி'
பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
7. அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத்
தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும்
தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப
ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ்
மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33 விழுக்காடு
போனஸ் மற்றும் 1.67 விழுக்காடுகருணைத்தொகையோ வழங்கப்படும்.
8. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும்
'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும்
11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும்
கருணைத் தொகை வழங்கப்படும்.
9. ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு
வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு
பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்
தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல்
வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு
கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு
பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும்1.67 விழுக்காடு கருணைத்
தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
10. இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத்
தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்
தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும்,
போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்
தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்
தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில்
பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக
வழங்கப்படும்.இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த
பட்சம் 8400 ரூபாய் அதிகபட்சம் 16800 ரூபாய் பெறுவர். தமிழ்நாடு அரசின்
பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887
தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் போனஸாக வழங்கப்படும்'' என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








