அண்ணா பல்கலையில், 'கேம்பஸ்' வேலைவாய்ப்பு முகாம், ஆக., 4ல் துவங்கியது.
இங்கிலாந்து,
அமெரிக்கா, ஜப்பானின், கார் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட, மைக்ரோசாப்ட்,
காக்னிசன்ட், இன்போசிஸ், டி.சி.எஸ்., ரிலையன்ஸ், எல் அண்ட் டி' போன்ற,
'சாப்ட்வேர்'
நிறுவனங்கள் என, 300க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆட்களை தேர்வு செய்ய, அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளன.
கடந்த ஆண்டு, ஜப்பானின், 'வொர்க் அப்ளிகேஷன்' என்ற நிறுவனம், அதிகபட்ச ஆண்டு
சம்பளமாக,
34 லட்சம் ரூபாய் பேசி, ஆட்களை தேர்வு செய்தது. இந்த வரிசையில், இந்த
ஆண்டு, ஐதராபாத்தில் செயல்படும், அமெரிக்க நிதி மேலாண்மை, ஐ.டி.,
நிறுவனமான,
'அர்செசியம்' சார்பில், அதிகபட்சமாக, 28 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அண்ணா பல்கலை பதிவாளர், எஸ்.கணேசன் கூறுகையில், ''இன்ஜி., மாணவர்
களுக்கான வேலைவாய்ப்பு முகாம், அண்ணா பல்கலை மட்டுமின்றி, அனைத்து அரசு இன்ஜி.,
கல்லுாரிகள், பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளிலும்
நடத்தப்படும். இன்ஜி., முடிக்க உள்ள மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன,'' என்றார்.
ஐ.டி.,
எனப்படும், சாப்ட்வேர் மற்றும் கணினி தொடர்பான நிறுவனங்கள் மட்டுமின்றி,
மற்ற துறை நிறுவனங்களும், அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கின்றனர்.
இதுகுறித்து,
அண்ணா பல்கலையின் தொழில் நிறுவன கூட்டு மையத்தின் இயக்குனர்,
டி.தியாகராஜன் கூறுகையில், ''மெக்கானிகல், சிவில், இ.சி.இ.,
எலக்ட்ரிக்கல், டெக்ஸ்டைல் என, அனைத்து துறை மாணவர்களுக்கும்
வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வளாகத் தேர்வில் பங்கேற்க அளிக்கப்படும்
பயிற்சியை, மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,''
என்றார்.
ஆகஸ்ட் முதல் ஏப்ரல் வரை அண்ணா பல்கலை கல்லுாரிகளில், 'கேம்பஸ்' முகாம்
செப்டம்பர் நான்காம் வாரம், அதிக அளவில் ஆட்கள் எடுக்கும், 'மெகா கேம்பஸ்' முகாம் துவக்கம்
நான்காம்
ஆண்டு மாணவர்கள், ஏழாவது செமஸ்டர் முடித்த பின், நவம்பர் இறுதியில்,
அனைத்து இணைப்பு கல்லுாரிகளிலும், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்
கேம்பசில் வாய்ப்பை பெற, அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும், சிறப்பு நேர்முகத் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன
ஆண்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் முதல், 28 லட்சம் ரூபாய் வரை சம்பளம் தரக்கூடிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.