பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு
ரூ. 75 லட்சம் பரிசுத்தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்
கோயல் அறிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் தமிழக
வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மாரியப்பன் 1.89 மீ, வருண் சிங் 1.86 மீட்டர் உயரத்தைத் தாண்டினார்கள்.பாராலிம்பிக்
போட்டியில் தங்கமும் வெண்கலமும் வென்ற இந்திய வீரர்களுக்குப் பரிசுத்தொகை
அறிவிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ. 75 லட்சமும் வருணுக்கு
ரூ. 30 லட்சமும் வழங்குவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல்
அறிவித்துள்ளார்.