“அரசு சார்ந்த பள்ளிகளாக இருந்து குறைந்தபட்சம் அப்பள்ளியின் 50 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம். அவர்களுக்கு தலா ரூபாய் 50 கட்டணம். தனியார் பள்ளி மாணவர்கள் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும்.
இத்தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் வகுப்புக்கு 20 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு விஞ்ஞானிகள் பங்குபெறும் இரண்டு நாள் அறிவுசார் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். இதன் முடிவில் அந்த 120 பேரில் வகுப்புக்கு மூன்று பேர் வீதம் 18 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இவர்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசும் முறையே 5,000, 2,000, 1,000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப் படும். இந்த 18 மாணவர்களில் வகுப்புக்கு இரண்டு பேர் வீதம், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்குக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் குடியரசுத் தலைவரால் ‘இமாலயன்’ விருது வழங்கியும் கவுரவிக்கப்படுவார்கள்’’ என்றார்.
தகவல்களுக்கு www.vvm.org.in என்ற இணையத்தைத் தேடலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கண்ணபிரானை 9942467764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








