தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்
ஊழியர்கள் குறைந்தபட்சமாக ரூ.8400ம், அதிகபட்சமாக ரூ.16,800 ம் போனசாக பெறுவார்கள். இதன் மூலம் 3,67,887 ஊழியர்கள் பயன் பெறுவார்கள். மொத்தம் ரூ.476 கோடியே 71 லட்சம் போனசாக வழங்கப்பட உள்ளது.மின்துறை, போக்குவரத்துறை, நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. வீட்டு வசதித்துறை, சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் கழக ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது.








