தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழுவுக்கு 4 வாரத்துக்குள் தலைவரை நியமனம் செய்யவேண்டும்;
தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு தலைவரை 4 வாரத்திற்குள் நியமிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ரவிராஜபாண்டியனும், இவரைத் ெதாடர்ந்து சிங்காரவேலும் இருந்தனர். அதன்பிறகு யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் 6 மாதத்திற்கும் மேலாக சென்னையிலுள்ள குழுவின் அலுவலகம் பூட்டியே உள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. கட்டண நிர்ணயக்குழு தலைவர் இல்லாததால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நடப்பு கல்வியாண்டில் தங்களது விருப்பத்திற்கேற்ப கட்டணம் வசூலித்து வருகின்றனர். தலைவர் பணியில் இருந்தால்தான் அவரால் உரிய முடிவெடுக்க முடியும். எனவே, உடனடியாக தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழுவின் தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி
எஸ்.நாகமுத்து ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக
அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆஜராகி, தலைவரை நியமிக்கும் பணி
விரைவாக நடந்து வருகிறது. அரசின் இறுதி முடிவிற்கு மேலும் கால அவகாசம்
வேண்டும் என்றார். இதையடுத்து தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு தலைவரை
நியமிக்க 4 வார கால அவகாசம் அளித்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.
நியமிக்கப்பட்ட விபரத்ைத நவ. 2ல் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய
வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை, ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ரவிராஜபாண்டியனும், இவரைத் ெதாடர்ந்து சிங்காரவேலும் இருந்தனர். அதன்பிறகு யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் 6 மாதத்திற்கும் மேலாக சென்னையிலுள்ள குழுவின் அலுவலகம் பூட்டியே உள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. கட்டண நிர்ணயக்குழு தலைவர் இல்லாததால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நடப்பு கல்வியாண்டில் தங்களது விருப்பத்திற்கேற்ப கட்டணம் வசூலித்து வருகின்றனர். தலைவர் பணியில் இருந்தால்தான் அவரால் உரிய முடிவெடுக்க முடியும். எனவே, உடனடியாக தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழுவின் தலைவரை நியமிக்க உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.