மனித செயல்பாடுகளால் உலகம் முழுவதும் 60% உயிரினங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் அதிாச்சி தகவல் தொிவித்துள்ளனா.
இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்காக மட்டும் இல்லை. அனைத்து உயிரினங்களும் இங்கு வாழ உரிமை உண்டு. ஆனால், வளர்ந்து வரும் இந்த நவீன உலகில் மனிதர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப இயற்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். மனிதனின் இந்த செயல் உலகை 6வது பேரழிவுக்கு வேகமாக அழைத்து செல்கிறது என அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா.
லிவிங் பிளானட் சமீபத்தில் வெளியிட்டுள்ளன ஆய்வு அறிக்கையில் 2016ம் ஆண்டு கணக்குப்படி உலகம் முழுவதும் வாழும் பறவைகள், பாலூட்டிகள், நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட 60% உயிரினங்கள் அழிந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.








