அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம் : மம்தா அறிவிப்பு
''மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி,
ரொக்கமாக அளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ்
தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.
செல்லாத நோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு
போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
இந்நிலையில், மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு
பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும் என, நேற்று அறிவித்துள்ளார். மேலும்,
மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, மாநில அரசே
ரொக்கமாக அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது