TNPSC : ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை .!!!
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள், 85 பக்கங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.
* தேர்வர்கள் யாரும், சிபாரிசுக்காக, தேர்வாணைய தலைவர், செயலர்,
உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கக் கூடாது. சந்திக்க
முயற்சித்தால், அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்
* விடைத்தாளில் பெயர், பதிவெண் போன்றவற்றை நேரடியாகவோ, குறிப்பாகவோ,
தேவையற்ற இடங்களில் எழுதினால், எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை
விதிக்கப்படும்* அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர, பென்சில், வண்ண பென்சில்,
வண்ண பேனா கிரயான்கள், ஒயிட்னர், ஸ்கெட்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்
கூடாது
* வினாத்தாள் மற்றும் விடைத்தாளில், பொது அறிவுரையில் குறிப்பிட்டபெயர்,
சுருக்கொப்பம், முகவரி தவிர, மற்ற பெயர், கையொப்பம், சுருக்கொப்பம்,
தொலைபேசி, மொபைல் போன் எண், முகவரி மற்றும் மதம் சார்ந்த குறியீடு இடுதல்
கூடாது
* விடைத்தாளில், பரிவு தேடும் விதத்தில், கெஞ்சி கேட்டு எழுதுவது கூடாது.
கேள்விக்கு தொடர்பில்லாத பாடம், பதில்கள் மற்றும் தன் அடையாளத்தை
வெளியிடும் வகையில் எழுதக் கூடாது
* கறுப்பு அல்லது நீலம் இரண்டு வகை பேனாவில், ஏதாவது ஒன்றை மட்டுமே
பயன்படுத்த வேண்டும். இரண்டிலும், மாற்றி, மாற்றி எழுதினால், அந்த
விடைத்தாள் தகுதி நீக்கம் செய்யப்படும்
* தேர்வர்கள் மின்னணு தகவல்கள் அடங்கிய, ஸ்மார்ட் வாட்ச்,மோதிரம்,
கம்யூனிகேஷன் சிப், மொபைல் போன், பல விபரங்கள் உடைய கால்குலேட்டர்களை,
தேர்வில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது* தேர்வர்கள், ஒன்றுக்கு
மேற்பட்ட மனைவியர் உடையவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால், ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை
திருமணம் செய்திருக்கக் கூடாது.இவ்வாறு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு
உள்ளன.
ஒரு மொழியில்மட்டும் எழுதலாம்