இன்று TNPSC தேர்வு எழுதும் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்:
TODAY GROUP IV EXAM ANSWER KEY WILL PUBLISH 02:00PM

2. 9.50 மணியளவில் அறைக்கண்காணிப்பாளரிடம் இருந்து விடைத்தாளை (OMR SHEET) பெற்று கவனமுடன் நிரப்புங்கள்.
3. கருமை அல்லது நீலநிற மையுடைய பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. 10 மணிக்கு வினாத்தாள் தொகுப்பினை பெற்றவுடன் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள் தொகுப்பில் 200 கேள்விகளும் சரியான முறையில் அச்சடிக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்த பின்னர் வினாத்தாள் வரிசை எண்ணை விடைத்தாளில்(OMR SHEET)எழுதி சரியான எண்களுக்கு நேராக நிரப்புங்கள்.
6.தவறாமல் நுழைவுச்சீட்டு(HALL TICKET) ,கைகடிகாரம் கொண்டு செல்லவும் நேர மேலாண்மை போட்டித்தோ்வுக்கு மிக மிக முக்கியம். தோ்வுக்கு நீங்கள் மூன்று மாதங்கள் படித்திருந்தாலும் சரி அல்லது மூன்று வருடங்கள் படித்திருந்தாலும் சரி, மூன்று மணி நேரத்தை நீங்கள் கையாளும் முறையிலேயே உங்களது வெற்றி தீா்மானிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளங்கள்.
7. கடைசி நேரத்தில் நீங்கள் படித்த எதையும் நினைவுப்படுத்தி பார்க்கவேண்டாம் இது உங்களுக்கு ஒருவித அச்ச உணா்வை உருவாக்கும். திறந்த மனநிலையில்(OPEN MIND) தோ்வை எதிர்க்கொள்ளுங்கள்.
8. தேர்வுக்கு முதல் நாள் இரவு நன்றாக உறங்குங்கள்.கடைசி நேரத்தில் புத்தகங்கள் அனைத்தையும் மலைப்போல் குவித்து வைத்து படிப்பதை தவிருங்கள் இது பதற்றத்தை அதிகரிக்கும் .
9. வினாத்தாள் எளிமையோ ,கடினத்தன்மையோ எப்படியிருப்பினும் கவனச்சிதறல் இல்லாமல் உங்களது சிறப்பான பங்களிப்பை அளியுங்கள் பதற்றம் வேண்டாம்.
10. வினாக்களை நன்கு கவனமாக படித்து விடையளிக்கவும். அறைகுறையாக படித்து தெரிந்த கேள்விளுக்கு தவறான விடையை தோ்வு செய்ய வேண்டாம்.
11.பின்வருவனவற்றில் எது தவறானது அன்று?,சரியானதுஅன்று,
ஏறுவரிசை,இறங்கு வரிசை,கூற்று, காரணம் போன்ற கேள்விகளில் தவறுகள் அதிகம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது மிகுந்த கவனம் தேவை.
12. 200 கேள்விகளுக்கும் கண்டிப்பாக விடையளிக்கவும் நேரமின்மை என்ற காரணம் கூறி வினாக்களை விட்டுவிட்டு வருவது உங்களது வெற்றியை பாதிக்கும்.
13.பதற்றமில்லாமல் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள் உங்களது வெற்றி உறுதிசெய்யப்பட்டது. வெற்றியாளராக உங்களை காண ஆவலுடன்.... காத்திருக்கிறோம் வெற்றி நிச்சயம்