வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, மீண்டும், 55 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு,
14.20 கிலோ; வணிகம், 19 கிலோ என, இரு வகையான, சமையல் காஸ் சிலிண்டர்களை
வினியோகம் செய்கின்றன.55 ரூபாய் உயர்ந்து
இவை,
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும்,
சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.சென்னையில், நவம்பரில், 538.50
ரூபாய்க்கு விற்ற வீட்டு சிலிண்டர், தற்போது, 55 ரூபாய் உயர்ந்து, 593.50
ரூபாயாக விற்கப்படுகிறது. 1,137 ரூபாயாக இருந்த, வணிக சிலிண்டர் விலை,
94.50 ரூபாய் உயர்ந்து, 1,231.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிலிண்டர் விலை மாறுதலுக்கு ஏற்ப, வீட்டு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், மானியம் வரவு வைக்கப்படும். நவம்பரில், வீட்டு சிலிண்டர் விலை, 39.50 ரூபாய்; வணிக சிலிண்டர் விலை, 80.50 ரூபாய் உயர்ந்தது. தற்போது, மீண்டும் அவற்றின் விலை முறையே, 55 ரூபாய், 94.50 ரூபாய் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.