பிறந்த தேதியில் மாற்றமா? பாஸ்போர்ட் விதிகள் தளர்வு:
பாஸ்போர்ட்டில், பிறந்த தேதியில் மாற்றம் செய்வது, எளிமையாக்கப்பட்டுள்ளது.
டில்லியில், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, சாட்டர்ஜி கூறியதாவது:பாஸ்போர்ட் பெற்று, ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டுமே, பிறந்த தேதியில் மாற்றம் செய்யும் நிலை இருந்தது. அதற்கான நடைமுறைகள், மிகவும் சிக்கலானவை. இந்த பிரச்னைக்கு தீர்வாக, புதிய வழிகாட்டு விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, பாஸ்போர்ட்டில், பிறந்த தேதியில் மாற்றம் செய்ய விரும்புவோரின் வேண்டுகோளை, எத்தனை ஆண்டுக்குள் விண்ணப்பிக்கின்றனர் என்பதை பொருட்படுத்தாமல், பரிவுடன் ஏற்கும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர் அளிக்கும் ஆவணங்கள், ஏற்கத்தக்கவையாக இருந்தால், அவர் பாஸ்போர்ட்டில், பிறந்த தேதி தொடர்பான திருத்தங்கள் உடனே செய்யப்படும்.
பாஸ்போர்ட் வழங்குவதற்கான நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த, பாஸ்போர்ட் விதிமுறைகளில் தக்க திருத்தங்கள் செய்ய, வெளியுறவு துறை திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.