உயரும்?
போதிய நிதியில்லாததால் பயணிகள் கட்டணம்
புதுடில்லி:ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க, நிதி
அமைச்சகம் மறுத்துள்ள நிலையில், இந்தப் பணிகளுக்கு நிதி ஆதாரத்தை
திரட்டும் வகையில், பயணிகள் ரயில் கட்ட ணத்தை உயர்த்த, ரயில்வே அமைச்சகம்
திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின், பல்வேறு அரசு மானியங் களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவது உள்ளிட்ட வற்றால், இவற்றில் இதுவரை நடந்து வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. உரியவர் களுக்கு மட்டுமே மானியம் அளிக்க வேண்டும் என்பதிலும், மோடி அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி யுள்ள ரயில்வே துறைக்கு புத்துயிர் கொடுக்க, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நிர்வாக ரீதியிலும், செயல்பாட்டு ரீதியிலும், ரயில்வே யின் பணிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக் கைகள் நடக்கின்றன.
துாய்மை மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருகின்றன. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முயற்சி யும் நடந்து வருகிறது. ரயில் பாதைகளை மேம் படுத்துவது, சிக்னல் முறையில் மாற்றம் செய் வது போன்றவை மூலம், ரயில்களின் வேகத்தை உயர்த்துவதுடன், பயணிகளின் பாது காப்பை உறுதி செய்ய முடியும் என, ரயில்வே

பயணிகள் பாதுகாப்பு

நம்புகிறது.
இந்தப் பணிகளுக்காக, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் கோடி ரூபாய், தேசிய ரயில் பாதுகாப்பு நிதியை ரயில்வே கோரியுள்ளது. இந்த நிதியின் கீழ், ரயில் பாதைகளை சீரமைப்பது, மேம்படுத்துவது, ஆளில்லா ரயில்வே கேட்களை மாற்றுவது, சிக் னல் முறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பணி களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுஉள்ளது.
ஆனால், இந்த நிதியை ஒதுக்க, மத்திய நிதியமைச் சகம்கைவிரித்துவிட்டது. ரயில்வே கோரி யுள்ள நிதியில், 25 சதவீதத்தை அளிப்பதாகவும், மீத முள் ளதை, சொந்த ஆதாரத்தில் இருந்து பயன் படுத்திக் கொள்ளும்படியும், தேவைப்பட்டால், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்தலாம் என்றும், ரயில் வேக்கு, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் ரயில் கட்டணத்தில், 57 சதவீதம் மட்டுமே ரயில்வேக்கு வருவாயாக கிடைக்கிறது. மீதமுள்ள, 43 சதவீதம் மானியமாக வழங்கப்படு கிறது. 1 கி.மீ., பயணத்துக்கு, ரயில்வேயில், 36 காசுகள் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு.
பயணிகளின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல் படுத்துவதற்கு நிதி திரட்டும் வகையில், பயணி களின் ரயில் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப் படும் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. நேரடியாக கட்டணத்தை உயர்த்தாவிட்டாலும், ரயில்வே பாதுகாப்பு வரி என, அனைத்து வகை ரயில் டிக்கெட்களுக்கும் கூடுதல் வரி வசூலிக்கப் படலாம் என, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் காரணங்களுக்காக, ரயில் பயணிகள் கட்டணம் நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. அதே நேரத்தில்,இதை ஈடுசெய்வதற்காக, சரக்கு ரயில் கட்ட ணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், சரக்குகளை எடுத்துச் செல்ல, மாற்று வழிகளை பயன்படுத்துவது உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ரயில்வேக்கு கூடுதல் நிதியை
ரூ.1.20 லட்சம் கோடி

மிகவும் குறைவு

புதிய திட்டங்கள்
அரசியல் காரணங்களுக்காக, ரயில் பயணிகள் கட்டணம் நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. அதே நேரத்தில்,இதை ஈடுசெய்வதற்காக, சரக்கு ரயில் கட்ட ணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், சரக்குகளை எடுத்துச் செல்ல, மாற்று வழிகளை பயன்படுத்துவது உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ரயில்வேக்கு கூடுதல் நிதியை
Advertisement
சில குறிப்பிட்ட மார்க்கங்களில் இயக்கப்படும் ராஜ்தானி உள்ளிட்ட, சிறப்பு ரயில்களுக்கு அதிக வரவேற்பு இல்லாத நிலையில், அவற் றில் முன்பதிவு செய்பவர்களுக்கு, கட்டணச் சலுகை அளிப்பது குறித்தும் ஆராயப்படுகிறது. அதேபோல், ரயில்களில் காலியாக இருக்கும் இடங்களுக்கும் கட்டணச் சலுகை அளிப்பதும், சுரேஷ் பிரவுவின் மற்றொரு திட்டம்.
வேறு வழியே இல்லை
ரயில்வே உயரதிகாரிகள் சிலர் கூறிய தாவது: தொடர்ந்து, பயணிகள் கட்டணத்தை உயர்த்தா மல் இருப்பது, ரயில்வேயின் செயல்பாட்டுக்கு மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. தரமான, பாதுகாப் பான, சுகமான ரயில் பயணத்துக்காக, சற்று அதிக விலை கொடுக்க பயணிகள் தயா ராக உள்ள னர். பாதுகாப்பு பணிகளுக்காக நிதி திரட்டவே, கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
பயணிகள் கட்டணத்துக்கு பதிலாக, சரக்கு கட்டணத்தை உயர்த்தினாலும், அந்த சுமை, மக்கள் மீது தான் விழுகிறது. மக்களுக்கு மனநிறைவு தரும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வ தற்கு, பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியே இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.