Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு :
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு :
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு
சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை
பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக
ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர்
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின்
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கப்
பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட் டம், லாஸ்பேட்டை
விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கல்வித்
துறை இயக்குனர் குமார் வரவேற்றார்.
அமைச்சர்
கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். துணை
சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு செயலர் அருண்
தேசாய் வாழ்த்தி பேசினர்.முதல்வர் நாராயணசாமி
பேசியதாவது:அரசு பள்ளிகளில் கல்வித்
தரம் சரியில்லை. இது ஆசிரியர் களின்
மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.நம்முடைய
பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க
வைக்கிறோம்.
மற்றவர்களின்
பிள்ளைத்தான் அரசு பள்ளிகளில் சேர்க்கிறோம்.
இதுதான் நிதர்சனமான உண்மை. அரசு பள்ளிகளில்
சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான வசதிகள்
உள்ளன. திறமையான ஆசிரியர்களும் உள்ளனர்.கணிப்பொறி ஆய்வகங்களும்
உள்ளன.
ஆனால்,
அவற்றை சரியான வகையில் பயன்படுத்திக்
கொள்வதில்லை.வகுப்புக்கு செல்லும்முன் ஆசிரியர்கள் முன் தயாரிப்புடன் பாடம்
எடுக்கச் செல்வதில்லை. முன் தயாரிப்புடன் போனால்,
மாணவர்களும் ஆர்வமுடன் கற்பார்கள். அகில இந்திய அள
வில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற
விகிதாசாரம் உள்ளது. புதுச்சேரியில் 14 மாணவர்களுக்கு
ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.கல்வியில் பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட்
ஆகியவை தரமான கல்வியில் கவனம்
செலுத்த ஆரம்பித்துள்ளன.
அங்கெல்லாம்
10 முதல் 15 சதவீதம் வரை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
உருவாகி வருகின்றனர். நாமும் தரமான கல்வியை
மாணவர்களுக்கு அளிப்பது முக்கியம்.தேர்வில் 100 சதவீத வெற்றி என்பது
சாதனை அல்ல. மாணவர்கள் எதைக்
கற்றுக் கொண்டனர் என்பதே முக்கியம். இதுவரை
நடந்தவற்றை விட்டுவிட்டு, இனிமேல் கல்வித் தரத்தை
மேம்படுத்த பொறுப்புணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால் விருதுகள், பதக்கங்கள் கொடுக்கிறோம்.
மேலும்,
சிறப்பாக பணியாற்றினால் இரட்டை பதவி உயர்வு
வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். அரசு பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து கூட்டத்
தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும்,
16 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். கல்வித் தரத்தை மேம்படுத்துவது
குறித்து விவாதித்து பரிந்துரை அளித்தனர். அந்த பரிந்துரைகளில் தேவையாவற்றை
அரசு நிறைவேற்றும்.இதேபோன்ற கலந்துரையாடல் கூட்டங்கள், அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்படும்
என்று கல்வித் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








