அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு
வட சென்னை அரசினர் தொடர் அறிவுரை மைய அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு அலுவலக
உதவியாளர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், ''வட சென்னை அரசினர் தொடர் அறிவுரை மைய அலுவலகத்தில்
காலியாகவுள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது
01.07.2016 அன்று 30-க்குள் இருக்க வேண்டும். இன சுழற்சியின்படி
இப்பணியிடம் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ''உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், அரசினர்
தொழிற்பயிற்சி நிலைய வளாகம், காத்பாடா ரோடு, சென்னை-21'' என்ற முகவரிக்கு
டிசம்பர் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய 044-25209268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.