TNPSC GROUP I தேர்விற்கு விண்ணப்பிக்க 12.12.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி
செயலாளர்வெளியிட்டசெய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85
காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, 09.11.2016 நாளிட்ட 19/2016ம்
எண்ணுடைய அறிவிக்கையினை 09.11.2016 அன்று வெளியிட்டது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 08.12.2016 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை
காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை
விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர். இதைத்தொடர்ந்து
பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த
தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க 12.12.2016 வரை கால நீட்டிப்பு
வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த
15.12.2016 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத்
தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை. இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால
நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால்
விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை
காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மா.
விஜயகுமார், இ.ஆ.ப செயலாளர் TAMIL NADU PUBLIC SERVICE
COMMISSION PRESS RELEASE Tamil Nadu PublicService Commission has issued
notification no. 19/2016 dated: 09.11.2016 for Direct Recruitmentto the
posts included in the Group I services. Despite the instructions given
to the Candidates, to submit their application through on-line much
before the closing date and not to wait till the last date for
submitting application to avoid the possibility of delay in submission
on account of heavy load or any other reasons on internet/website, large
number of candidates are trying tosubmit their application at the
crucial dates. On considering the representations received for extension
of last date and to facilitate large number of candidates trying to
submit their application, Commission has decided to extend the last date
for submission of application upto 12.12.2016 and correspondingly the
last date for payment upto 15.12.2016. However, there is no change in
the date of Preliminary Examination. Further extension of dates will not
be given on anyaccount. Hence the candidates are advised to utilize
this opportunity and submit their application well in advance. M.
Vijayakumar, I.A.S., Secretary.
இவ்வாறுஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.