பிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு
பிளஸ் 2 தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கால
அவகாசம் தரப்பட்டு உள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவிப்பு:வரும் மார்ச்சில், பிளஸ் 2 பொதுத்தேர்வு
எழுத உள்ள தனித்தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, ஜன., 25 முதல், 29
வரை, பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம்,
பிப்., 28 வரை நீட்டிக்கப்படுகிறது. தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/
என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.