பிப். 28-க்குள் வங்கிக் கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்: மத்திய அரசு அதிரடி!
பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் வங்கி கணக்குடன் பான் கார்டு (நிரந்தர
கணக்கு) எண்ணை இணைக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் மற்றும் மத்திய நேரடி
வரிவிதிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் சார்பில் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வங்கிக் கணக்குகளுடன் வருமான வரி பான் (நிரந்தர கணக்கு எண்) கார்டு எண்ணை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். பான் கணக்கு எண் இல்லாதவர்களிடம் படிவம் எண் 60-ஐ பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் ஜன்தன் கணக்குகள் மற்றும் பூஜ்யம் இருப்புத் தொகை கொண்ட வங்கிக் கணக்குகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.