இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியுள்ளார். இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள்
மற்றும் 3 டி20 போட்டிகளில் இம்மாதம் விளையாடவுள்ள நிலையில் இம்முடிவை தோனி
எடுத்துள்ளார். அதேசமயம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அணியில்
விளையாட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2014-ல் டெஸ்ட்
போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. 2007 முதல் இந்திய அணியின் கேப்டனாக
உள்ள தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு
ஆளாக்கியுள்ளது.