பொங்கல் போனஸ் உண்டா? : அரசு ஊழியர்கள் கலக்கம்
பொங்கல் போனஸ் இன்னும் அறிவிக்கப்படாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.
தமிழக அரசு, ஆண்டு தோறும், பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசின், 'ஏ, பி' பிரிவு ஊழியர்களுக்கு, 1,000 ரூபாய்; 'சி - டி' பிரிவு ஊழியர்களுக்கு, 3,000 ரூபாய்; ஓய்வூதியம் பெறுவோருக்கு, 500 ரூபாய் போனஸ் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு, பொங்கலுக்கான போனஸ் இதுவரை அறிவிக்கப்படாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு,மனு ஒன்றை அளித்துள்ளன. அதில், 'பொங்கல் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; போனஸ் வழங்க காலதாமதம் கூடாது. பண தட்டுப்பாடு உள்ளதால், ரொக்கமாக வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.