கணவன், மனைவி பெயரில் பிரித்து டெபாசிட் செய்திருந்தாலும் சிக்கல் : முகவரியை வைத்து ஆராய்கிறது வருமான வரித்துறை
செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ₹500, ₹1,000 நோட்டை கணவன், மனைவி பெயரில் தனித்தனியாக டெபாசிட் செய்திருந்தாலும், முகவரி அடிப்படையில் அவற்றை கண்டுபிடித்து விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் 8ம் தேதி செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ₹500, ₹1,000 நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது. அதோடு, சேமிப்பு கணக்கில் திடீரென டெபாசிட் அதிகரித்திருந்தாலும், ₹2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் இருந்தாலும் விளக்கம் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து தப்பிக்க, கணவன், மனைவி, மகன் பிரித்து சிலர் டெபாசிட் செய்துள்ளனர். இதை கண்டுபிடிக்க வருமான வரித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒரே முகவரியில் வசிப்பவர்கள் டெபாசிட் செய்த மொத்த தொகை ₹2.5 லட்சத்துக்கு கீழ் இருந்தாலும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை வைத்து விவரங்களை வருமான வரித்துறை திரட்டி வருகிறது.செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ₹500, ₹1,000 நோட்டை கணவன், மனைவி பெயரில் தனித்தனியாக டெபாசிட் செய்திருந்தாலும், முகவரி அடிப்படையில் அவற்றை கண்டுபிடித்து விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த நவம்பர் 8ம் தேதி செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ₹500, ₹1,000 நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது. அதோடு, சேமிப்பு கணக்கில் திடீரென டெபாசிட் அதிகரித்திருந்தாலும், ₹2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் இருந்தாலும் விளக்கம் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து தப்பிக்க, கணவன், மனைவி, மகன் பிரித்து சிலர் டெபாசிட் செய்துள்ளனர். இதை கண்டுபிடிக்க வருமான வரித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒரே முகவரியில் வசிப்பவர்கள் டெபாசிட் செய்த மொத்த தொகை ₹2.5 லட்சத்துக்கு கீழ் இருந்தாலும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘செல்லாத நோட்டு டெபாசிட் செய்பவர்களை கண்டுபிடிக்க புதி்ய அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமான விவரங்களோடு டெபாசிட் செய்த தொகை வேறுபட்டிருந்தால், சம்பந்தப்பட்டவரின் பான் எண் மூலம் ஆராயப்படும். அதோடு, முகவரி, தொலைபேசி எண்ணை வைத்து, ஒரே வீட்டில் வசிப்பவர்கள் டெபாசிட் செய்த தொகை எவ்வளவு? அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா? உள்ளிட்ட விவரங்களும் திரட்டப்படுகின்றன. இந்த தொகை ₹2 லட்சத்துக்கு கீழ் இருந்தால் கூட விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.
அதிக மதிப்புள்ள பொருள் வாங்கினால் விசாரணை
செல்லாத நோட்டு டெபாசிட் செய்தவர்கள் அதிலிருந்து எந்த வகையிலான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர் என ஆராயப்படுகிறது. குறிப்பாக அதிக மதிப்புள்ள பொருட்கள் வாங்கியிருந்தாலும், சந்தேகத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.