தமிழக அரசு இடை நிலை ஆசிரியருக்கு 1-1-2011 முதல் அ .ஆ .எண் ;23 ன் படி ரூ 750 தனி ஊதியம் வழங்கியது.அதுவும் 1.1.2006 முதல் 31-12-2010 வரை கிடையாதாம் .ஏன் என்றால் நாம் எல்லாம் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் நல்லவர்கள் . பாதிப்பை உரியவர்களிடம் எடுத்து சொல்ல தனி தகுதி அற்றவர்கள் . தலைவர்களையும் பலரையும் நம்பி நம்பி ஏமாந்தது தான் மிச்சம் .
தமிழ் நாட்டில் 365 ஒன்றியங்கள் உள்ளது அப்படி ஆனால்
2006 ல் பாதிக்கப்பட்டவர்கள் 365 * 10 = 3650 பேர்
2007 ல் பாதிக்கப்பட்டவர்கள் 365 * 10 = 3650 பேர்
2008 ல் பாதிக்கப்பட்டவர்கள் 365 * 10 = 3650 பேர்
2009ல் பாதிக்கப்பட்டவர்கள் 365 * 10 = 3650 பேர்
2010 ல் பாதிக்கப்பட்டவர்கள் 365 * 10 = 3650 பேர்
மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 3650*5 = 18,250 பேர் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்த பிரச்சனைக்காக இதுவரை நீதிமன்றம் செல்ல வில்லை ஏன் என்றால் நமக்கு நம் பாதிப்பு தெரியாது .அடுத்து நமக்கு உரிய வழிகாட்டுதல் இல்லை நீதிமன்றத்திற்கு வழக்குக்கு செலவு அதிக பச்சம் ரூ 25000 தான் ஆகும் .
இந்த பாதிப்புக்காக பாதிக்கப்பட்ட நாம் நீதிமன்றத்திற்கு செல்லாவிட்டால் நம் ஆயுள் இறுதி வரை வருடத்திற்கு வருடம் பாதிப்பு தொகை அதிகமாகும் .








