மறதி தவிர்க்க...1. தொடர்ந்து நாள் முழுவதும் படித்தலை தவிருங்கள். இடையிடையே ஓய்வுஅவசியம்
2. கடினமாய் உணரும் பாடப்பகுதியை ஒரு பக்க நினைவு கூர்தல் குறிப்பு மூலம்மீள்பார்வை செய்யுங்கள்
3. பாடப்பகுதி பார்த்து பயம், சலிப்பு வேண்டாம். ஆர்வமுடன் படித்தல்மிகஅவசியம்
4. கவன சிதறல் தரும் நிகழ்வுகளை தவிர்க்கவும்
5 . குடும்ப சிக்கல்களை தூரம் வைத்து விட்டு படிப்பில் ஆர்வம் செலுத்தவும்
6. காய்கறிகள், பழம், பால் சோர்வை போக்கி புத்துணர்வு தரும். மூளையைசோர்வற்று பார்த்து கொள்வது இவையே
7. தேர்வை எண்ணி படியுங்கள். தேர்வு முடிவுகளை எண்ணி படிக்காதீர்கள்
8. நீண்ட, அதிக செறிவுடைய பாட பகுதியை காலையில் படியுங்கள்
9. புரியாத பெயர்களுக்கு தங்கள் வாழ்வுடன் தொடர்புடைய நினைவு கூர்தல்குறிப்புகளை வைத்து படியுங்கள்
10. அன்றைய படித்த பாட பகுதியை இரவில் தினமும் 1 மணி நேரம் திருப்புதல்செய்யுங்கள்.
11. தேவையற்ற மெடிரியல் படிப்பதை தவிர்த்து தேவையான பாட பகுதியை மட்டும்சேகரியுங்கள்
12. நீர் அதிகம் அருந்துங்கள். களைப்பை தூர தள்ளும்.
13. வெற்றி நிச்சயம் என துணிந்து படியுங்கள். மறதி நோயல்ல உணர்வு. அதை தூக்கிஎரியுங்கள்
வாழ்த்துகளுடன்
பிரதீப் பட்டதாரி ஆசிரியர் பூங்குளம்