விழுப்புரத்தில் விடுமுறை திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு.
'விழுப்புரம் மாவட்டத்தில், திட்டமிட்டபடி நாளை, பிளஸ் 2 தேர்வுகள்
நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார்
அங்காளம்மன் கோவில் விழாவுக்காக, அந்தமாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது; அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் இயங்காது.
ஆனால், தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு நாளை துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 தேர்வு என்னாகும் என, தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால், தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு நாளை துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 தேர்வு என்னாகும் என, தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, விழுப்புரம்
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மார்ஸ் கூறுகையில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு,
திட்டமிட்டபடி நடக்கும். தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள், அதிகாரிகள்
விடுப்பு எடுக்கக் கூடாது. மற்ற பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை
அறிவிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.