தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கான நிவாரணத்தை தமிழகஅரசு அறிவித்துள்ளது. அரசின் நடவடிக்கைகளில் இணையும் வகையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை.இதுதவிர, மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை வழங்கும் வகையில், மாநில அரசின் 8-வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும் வகையில், அதற்கான வல்லுநர் குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதன்பின், தமிழக அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த குழு அமைத்தது. அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும் இதுவரை அறிக்கை வழங்கவில்லை. அரசு ஊழியர் சங்கங்களை அழைத்து பேசி 7 மாதங்கள் கடந்துவிட்டது. அறிக்கையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக அமையுமோ என்ற சந்தேகம் உள்ளது. அவ்வாறாக வந்தால், முன்னாள் முதல்வரின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகவே அமையும்.மேலும், பல்வேறு கோரிக்கை கள் தொடர்பாக, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பில் உள்ள சில அமைப்புகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த அமைப்புகளின் கோரிக்கை யும் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளும் வெவ் வேறானவை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல், கூட்டமைப் பின் நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.