அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க...*
*முதலில் ஆசிரியர்களாகிய நம்மைதான் சீர்படுத்திக் கொள்ளவேண்டும் இதை படியுங்கள்*.
ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு
நாளை சமுகத்தின்
இன்றைய சிற்பிகள் நாம்...
ஆண்டி முதல்
அரசியல்வாதி வரை...
ஆசிரியரால் உருவாக்கப் படுபவர்கள்...
*இச்சமூகத்தில் நல்ல மாற்றங்களை நம்மால் ஏற்படுத்த முடியும்...*
என்று முதலில்
உங்கள் மீது நல்ல
2. ஒற்றுமையே உயர்வு
ஊர்கூடி தேர் இழுப்பது போன்றுதான் - உங்கள்
செயல் என்றாலும்...
உங்கள் கருத்துக்களை
மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் - என்று உடனே உங்கள் கருத்துக்களை
அவர்களிடம் திணிக்காதீர் - இது
உங்கள் நண்பர்களையும்
பகைவர்கள் ஆக்கும்
உறவினராயினும் பின்
உறவு கசக்கும்...
3. முதல் பயணம்...
அப்படி என்றால் தனி ஒரு நபராய்
நான் மட்டும் எப்படி? - என்ற கேள்வி
உங்களை பின்னுக்கு இழுக்கும்..
புறம் தள்ளுங்கள் அதை முதலில். பின்னர், உங்கள் தன்னம்பிக்கையை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டு பயணியுங்கள்
உங்கள் காலின் நடைபாதைக்கு மட்டும் வெளிச்சம் கிட்டும்...
அது வேறு எதுவும்அல்ல உங்கள் தன்னம்பிக்கை
4. விளக்கு எரிய...
*நல்ல மாற்றங்கள் நம்மிடம் இருந்து பிறக்கப் போகிறது* என்று
உங்களை நீங்களே அவ்வப்பொழுது
பாராட்டிக் கொள்ளுங்கள்.
*இந்த சுய பாராட்டு நம்மை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் சோர்வடையச் செய்யாது...*
இது உங்கள் தன்னம்பிக்கை விளக்கிற்கு
வார்க்கும் எண்ணெய்...
5. தடை ஓட்டப் பயணம்..
உங்கள் நெடும் பயணத்தில்
கேலிகள் வேலி போடும்
இலக்கை அடைவதுதான் நம் நோக்கம்
வேலியை உடைப்பது நம் இலக்கல்ல
கோபம் கொண்டு உடைக்க முற்படாதீர்...
அதில் நம் சக்தியை விரையமாக்க வேண்டாம்
புத்திசாலியாய் தாண்டி செல்லுங்கள்...
6. கழி கிடைக்கும் கண்டிப்பாய்...
உங்கள் விடாமுயற்சிக்கும்
தன்னம்பிக்கைக்கும் சிறிய பரிசு காத்திருக்கும்
அந்த
இருட்டு பயணத்தில்இன்னொரு ஓளி -ஆம் உங்களை போன்றே உங்கள் முன்னோ பின்னோ
ஒருவர் வந்து கொண்டிருப்பார் - அல்லது சென்று கொண்டிருப்பார்...
உங்கள் பயணப்புகழ் பகிராதீர்..அவரைப் பார்த்து புன்னகை மட்டும் சிந்துங்கள்...நீங்கள் விழும் நேரத்தில் கழியாய் இருப்பார்...
7. தோள் கொடுத்து தொடருங்கள்
இரண்டு கால்களின் பயணம் நான்காகும்
இரண்டு விளக்குகளின் வெளிச்சம் உங்கள் பாதையை இன்னும் தெளிவாக்கும் தோள் கொடுத்து தொடருங்கள்
தோல்வி பயம் பட்டு போகும் தற்போது மெல்ல வெற்றி வெளிச்சம் போட்டுக் காட்டும்
உங்களின் பயணப் பாதையை...
8.உங்கள் வெற்றி இதுவல்ல
இது
உங்களின் வெற்றியல்ல.. உங்கள் தன்னம்பிக்கையின் வெற்றி .அதிராமல்
ஆரவாரமில்லாமல் அமைதியாய் நீங்கள் வந்த பாதையை சற்று திரும்பி பாருங்கள்.
ஒரு கூட்டமே ஒளிப் பிழம்பாய் வந்து கொண்டிருக்கும்
இதுதான் உங்களின் வெற்றி...
-> இது ஓர் ஆசிரியரின் பயணக் குறிப்பு
*அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க...*¹
1. தற்பொழுது இருக்கும் மாணவர்களை தமிழ், ஆங்கில வாசிப்புத் திறனை சீர்படுத்துங்கள்.
2.
மாணவர்கள் தங்கள் முந்திய வகுப்பு வரை எதுவும் தெரிந்து கொண்டு வருவதில்லை
என்று குறைகூறாமல் உங்கள் திறமைக்கு அளிக்கப்பட்ட சவாலாய் எடுத்துக்கொண்டு
செயல்படுங்கள்...
3.
எழுத்தே கூட தெரியாமல் இருப்பார்கள் அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு
அட்டைதாளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கொண்டு தினமும் வாய்விட்டு படிக்கச்
சொல்லி பயிற்சி கொடுங்கள்..
4.
தினமும் க - வரிசை ங - வரிசை என்று ஒவ்வொரு வரிசையாய் பழைய தமிழ்
செய்திதாள்களை கொடுத்து எழுத்துக்களை வட்டமிட்டு வரச் செய்யுங்கள்.
இப்பயிற்சி எழுதுக்களின் உருவங்களை அவர்கள் மனதில் நிலைநிறுத்த பயன்படும்.
5. ஒரு சொல்வார்த்தை இரு சொல்வார்த்தை என தினமும் 10 வார்த்தைகள் (சொல்வதை எழுதுதல்) டிக்டேஷன் வைத்து பளு இல்லாமல் வலு சேருங்கள்
6. வாசிப்பில் எழுத்துக்களின் சேர்ப்பை தெளிவான ஒலி நடையுடன் மெதுவாய் கற்பித்து அவர்களின் வாசிப்பிற்கு வாய்ப்பு கொடுங்கள்...
7.
வாய்ப்பை வலுப்படுத்த தினமும் நீங்கள் வாசித்து, அவர்களையும் வாசிக்க
வைத்து, ஒழுங்குபடுத்தி, வாசிக்க செய்து பயிற்சி கொடுங்கள்...
8. தொலைக்காட்சி செய்தி வாசிப்பை மாணவர்களிடம் இதுதான் வாசிப்பு என்று உதாரணப் படுத்துங்கள்.
9. அதுபோன்று வாசிக்கும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவர்களை முன்னிலைப் படுத்தி பாராட்டுகளை பெற்றுக் கொடுங்கள்..
10. பரிசுகளை வழங்குங்கள்.
*விதை
முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, நோய்பட்டோ, மீண்டும்துளிர்விட்டோ,
இலைவிட்டு, கிளைபடர்ந்து, மலர்மலர்ந்து, காய்விட்டே கனியாகிறது..*
இதே போலதான் மாணவர்கள் உங்களுக்கு எந்த நிலையிலும் எந்த கலவையிலும் உங்கள் வகுப்பிற்குள் வந்து சேர்வார்கள்...
விரக்தியும்,
விதண்டா வாதத்தையும் விட்டு விட்டு...நீர் ஊற்றுவதும், உரமிடுவதும், நோய்
வராமல் பாதுகாப்பதும் நம்கடமை என்று எண்ணி பயணத்தைத துவக்குங்கள்...
*நம் முதல் பயணம் வெற்றிபெற நம்மை நாமே வாழ்த்திக்கொண்டு புறப்படுவோம்..*
♻♻♻
♻♻♻







