liquidity-12-rasi-zodiac: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


liquidity-12-rasi-zodiac:

12 ராசிக்காரர்களின் பணப்புழக்கம் எப்படி இருக்கும்:
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பணப்புழக்கம், யோகம் என்பன அவரவர் ராசியைப் பொறுத்து அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை. அதன்படி பன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்பன குறித்து பார்ப்போம்.


மேஷம் :



கண்ணிமைக்கும் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் உங்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்ட நீங்கள் புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் அடைவீர்கள். உங்களிடம் பணப்புழக்கம் மிக சிறப்பாக காணப்படும்.

ரிஷபம் :



நீங்கள் வேலையில் முழு மனதுடன் உழைப்பவர், பணத்தை கடவுளாக நினைப்பவர். இருப்பினும் உங்களிடம் பணம் தங்குவது கடினம். எந்தளவுக்கு உழைக்கின்றீர்களோ அதேயளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவரான நீங்கள், மற்றவர் மீது அதிகாரத்தை பயன்படுத்துவதனால் மற்றவர்களுக்கு நீங்கள் சுயநலவாதியாக தெரிவீர்கள். நீங்கள் இலகுவாக பணக்காரனாக முடிவதில்லை.

மிதுனம் :



உங்களிடம் பணப்புழக்கம் அதிகமாகவும் இருக்காது, பற்றாக்குறையும் ஏற்படாது. பிறப்பு முதல் இறப்பு வரை உங்களிடம் பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்

கடகம் :



நீங்கள் உங்களது வாழ்க்கைத் துணையிடம் குடும்ப பொருளாதாரத்தை ஒப்படைத்துவிடுவீர்கள். பயணத்தால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். 14, 26, 30 வயதுகளில் நல்ல யோகத்தை பெறும் வாய்ப்பு உண்டு. பணத்தை சேமிக்கும் எண்ணம் இருக்கும். பணத்தை சம்பாதிக்க பாடுபடுவீர்கள். இருப்பினும் சிலவேளைகளில் பணத்தட்டுப்பாடு இருந்து வரும்.

சிம்மம் :



உங்களிடம் பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எப்போது தேவைப்பட்டாலும் உங்களுக்கு பணம் கிடைத்துவிடும். நீங்கள் பணத்தை செலவழிக்க பயப்படுவீர்கள். செலவு ஏற்பட்டாலும் அதை நினைத்து கவலை கொள்வீர்கள். பண வரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவும் இருக்கும். பணத்தை சேமிப்பது உங்களுக்கு எளிதானதல்ல. வீட்டில் திருடு போகவும், பொருள் காணாமல் போகவும் பொருட்களை மறந்து வைத்துவிடவும் வாய்ப்புண்டு. நீங்கள் வீட்டில் ஏதேனும் மிருகமோ அல்லது பறவையோ வளர்ப்பது நல்லது.

கன்னி :



நீங்கள் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர் மாத்திரமன்றி, பணத்தினுடைய மகத்துவத்தை நன்றாக புரிந்து கொண்டவரும் கூட. பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவீர்கள்.

துலாம் :



வியாபாரத்தில் நீங்கள் அதிக லாபம் அடைவீர்கள். உங்களது குணநலத்தின் காரணமாக எந்த காரியத்தை செய்தாலும் அதில் அதிக லாபம் விரைவிலேயே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும்.

விருச்சிகம் :



உங்களது ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆனால், அதற்கு கடின உழைப்பு அவசியம். செலவை குறைப்பது நல்லது. எந்த காரியத்தையும் முழுவதுமாக முடித்தால் பண வரவு நிச்சயம். எங்கே சென்றாலும் அங்கிருந்து பணம் வரும். பணவரவால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

தனுசு :



உங்களுக்கு கொடுக்கல் - வாங்கல், வாங்குதல்-விற்றல் எல்லாமே இழுபறியாக இருக்கும். உங்களுக்கு அதிகம் செலவாவதால் சேமிக்க இயலாது. உங்களது வாழ்நாளில் ஒரு பெரும் செலவு செய்யும் வாய்ப்புண்டு. ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு. பணம் இருந்தால்தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்களுக்காகவே செலவழிப்பீர்கள்.

மகரம் :



உங்களது திறமையால் லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் நீங்கள். எந்த தொழிலை செய்தாலும் நஷ்டம் அடைய மாட்டீர்கள். தர்மம் செய்ய அஞ்சமாட்டீர்கள். உங்களது செலவை குறைக்க முடியாது. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே பாதி நேரம் செலவழியும். சாதாரண பண நடமாட்டம் இருக்கும்.

கும்பம் :



உங்களது வீட்டு செலவைக் கூட நீங்கள் புத்திசாலித்தனமாக குறைத்துவிடுவீர்கள். உங்களுக்கு நண்பர்களை விட எதிரிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். உங்களுக்கு அசையும்-அசையா சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது. எப்போதும் பண நடமாட்டம் இருக்கும் நபராகவே திகழ்வீர்கள். உங்களுக்கு 25 வயதில் இருந்தே யோகம் ஆரம்பிக்கிறது. 25, 28, 40, 45, 51 மற்றும் 63ஆம் வயதுகளில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். எனினும் சிறப்பான யோகம் ஏதும் உங்களுக்கு இல்லை. செலவை குறைக்க வாய்ப்பும் இல்லை. ஆனால், சொத்து சேரும் யோகம் உண்டு.

மீனம் :



உங்களது சுய முயற்சியாலேயே பணத்தை சம்பாதிப்பீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி லொத்தர் மற்றும் தரகு வேலைகளில் ஈடுபட்டால் அதிக நஷ்டம் உண்டாகும். அப்படி இருந்தாலும் உங்களது வாழ்நாள் முழுவதும் பணம் குறையாது. பணம் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும். பணம் உங்களுக்கு சாதாரணமான ஒன்று. நீங்கள் வாங்கும் இடங்களில் அதிக கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரங்களில் ஏற்ற தாழ்வு நிகழும், அவதானம் தேவை.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H