பிளஸ் 1 வகுப்பிற்கு மாதிரி வினாத்தாள் இன்னும் ஒரு வாரத்தில்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்
பள்ளியில் மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் நோட்டுகள் மற்றும்
சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி
மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணியைத்
தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் நோட்டு புத்தகங்கள்
மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
கல்வி நிறுவனங்களின் தேவைகள் இந்த வருடத்தின் இறுதிக்குள் நிறைவேற்றி
தரப்படும். மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் சாலை விதிகளை மதிக்கும்
வகையில் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.