தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இந்தஆண்டு முதல் புதிதாக எம்.எட்., படிப்பு தொடங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி யல் பல்கலைக்கழகம் சென்
னையை அடுத்த காரப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.2017-18-ம் கல்வி ஆண்டு
முதல் முழுநேர எம்.எட்., படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில்
(என்சிஇடிஇ) அனுமதி அளித் திருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திர நாத் தாகூர்
தெரிவித்துள்ளார்.
இப்படிப்பில் ஆண்டுக்கு 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் மாணவர்
சேர்க்கை தொடர்பானஅறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்
கூறியுள்ளார்.