எம்பிபிஎஸ் பிடிஎஸ் செவிலியர் படிப்புகள்-விரிவான தகவல்கள்..
பிளஸ்2 வகுப்பு முடித்து மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள்
மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள் படிக்க விரும்புவோர் அவற்றில் எதை
தேர்வு செய்வது என்று குழப்பம் அடைவது வழக்கம். மருத்துவத்தில் எம்பிபிஎஸ்,
பல்மருத்துவம், இந்திய மருத்துவ படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்புகள்,
செவிலியர் படிப்புகள், இயன் முறை மருத்துவம், மருந்தாளுநர் படிப்புகள்
ஆகியவை படிக்கலாம்
எம்பிபிஎஸ்:
மத்திய, மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. அவற்றில் நீட் நுழைவுத்தேர்வு, ஜிப்மர் நுழைவுத் தேர்வு, எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு (டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிஷிகேஷ்), ஆயுதப்படை மருத்துவ கல்லூரி pre-medical Test-Pune, மாநில அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனையில் மாணவர் சேர்ககை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகின்றன.
இது தொடர்பான விவரங்களை www.health.org.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அரசு மருத்துவக்கல்லூரிகள்21, தனியார் மருத்துவ கல்லூரிகள் 26 உள்ளன. எம்பிபிஎஸ், பட்டம் பெற்றவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் மருத்துவராக பணியாற்றலாம். எம்டி, எம்எஸ் போன்ற உயர் கல்வி படிக்கலாம். ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபடலாம்.தனியார் மருத்துவமனை தொடங்கலாம். அயல் நாட்டு வேலை வாய்ப்பு பெறலாம்.
பல் மருத்துவம் (பிடிஎஸ்):
பிளஸ் 2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணக்கு அல்லது தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்பாடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிடிஎஸ் படிப்பு 5 ஆண்டுகள் படிக்க வேண்டும். மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழக டாக்டர் ஹர்வான்ஸ் சிங் ஜட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்ஸ்க்கு நீட் தேர்வு மூலமாக சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி, 25 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. பிடிஎஸ் பட்டம் பெற்றபிறகு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல் மருத்துவராக பணியாற்றலாம்.
எம்டிஎஸ் போன்ற உயர் கல்வி படிக்கலாம். தனியார் பல் மருத்துவமனை தொடங்கலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறலாம். மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஒக்கப்படுகிறது.
செவிலியர் படிப்புகள் (Nursing):
பி.எஸ்சி நர்சிங் 4 ஆண்டு படிப்பு, பிஎஸ்சி (ஹானர்ஸ்) நர்சிங் 4 ஆண்டுபடிப்பு, பிஎஸ்சி (போஸ்ட்பேசிக்) நர்சிங் 4 ஆண்டுபடிப்பு, டிப்ளமோ நர்சிங் மற்றும் மிட்ஒய்ப் 3 ஆண்டு படிப்பு, டிப்ளமோ ஆயுர்வேதா நர்சிங் மற்றும் பார்மசி இரண்டரை ஆண்டு படிப்பு ஆகியவை நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 வகுப்பில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணக்கு, அல்லது தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசின் செவிலியர் கல்லூரிகளில் எய்ம்ஸ் அகில இந்திய நுழைவுத் தேர்வு, ஜிப்மர் நுழைவுத் தேர்வு, ஜெய்ப்பூர் தேசிய ஆயுர்வேதா இன்ஸ்டிடியூட்- அகில இந்திய நுழைவுத்தேர்வு, புனே ஆயுதப்படை மருத்துவ கல்லூரி பிரிமெடிக்கல் டெஸ்ட், இந்திய சுகாதார கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மாநில அரசு செவிலியர் கல்லூரிகளில், மருத்துவ கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. அரசு செவிலியர் கல்லூரிகள் 5, தனியார் செவிலியர் கல்லூரிகள் 156, சுயநிதி செவிலியர்கல்லூரிகள் 6 இயங்கிவருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றலாம். எம்எஸ்சி நர்சிங் போன்ற உயர் கல்வி படிக்கலாம். அயல் நாட்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
இயன் முறை மருத்துவம் (Physiotherapy): இளநிலைபடிப்பில் இயன்முறைபடிப்பு நான்கரை ஆண்டுகள், இளநிலை புரோஸ்தடிக்ஸ் மற்றும் ஆர்த்தோடிக்ஸ் நான்கரை ஆண்டு படிப்பு, டிப்ளமோவில் புரோஸ்தடிக்ஸ் மற்றும் ஆர்த்தோடிக்ஸ் 2 ஆண்டு படிப்பு, பிசியோதெரபி 2 ஆண்டு படிப்புகள் நடத்தப்படுகின்றன.
பிளஸ் 2 படிப்பில் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அளவில் பொதுநுழைவுத் தேர்வு, மாநில அளவில் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இயன் முறை மருத்துவம் படித்த பிறகு எம்பிடி போன்ற உயர் கல்வி படிக்கலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்ட் ஆக வேலைவாய்ப்புகளை பெறலாம். சொந்தமாக இயன்முறை மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கலாம். அயல் நாட்டு வேலை வாய்ப்புகளை பெறலாம்.
மருந்தாளுநர் படிப்புகள் (Pharmacy):
பி.பார்ம் 4 ஆண்டுபடிப்பு, டி.பார்ம் 2 ஆண்டு படிப்பு, டாக்டர் ஆப் பார்மசி 6 ஆண்டு படிப்புகள் நடத்தப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணக்கு, அல்லது தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளில் (BITSAT) தேர்வு முறையின் கீழும், மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் கவுன்சலிங் மூலமும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அரசு மருந்தாளுநர் கல்லூரிகள் 2, தனியார் மருந்தாளுநர் கல்லூரிகள் 37, எம்பார்ம் போன்ற உயர் கல்வி படிக்கலாம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருந்தாளுநராக பணியாற்றலாம். மருந்து ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளலாம். விற்பனையாளராக பணியாற்றலாம். தனியாக மருந்தகம் தொடங்கலாம். தனியாக மருந்து கம்பெனிகள் தொடங்கலாம். பார்ம்டி படித்தவர்கள் நோயாளிகளுக்கு மருந்து ஆலோசகராக பணியாற்றலாம். அயல் நாட்டு வேலை வாய்ப்புபெறலாம்.