Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்
குழுமத்தால் 23-1-2017 அன்று இரண்டாம் நிலைக் காவலர் (13,137), இரண்டாம்
நிலை சிறைக் காவலர் (1,015) மற்றும் தீயணைப்போர் (1,512) பணியிடங்களுக்கான
பொதுத் தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டது.
இதுவரை நடைபெற்ற போலீஸ் வேலைக்கான பொதுத்
தேர்வுகளிலேயே இந்த தேர்வில் தான் அதிக பட்சமாக (6.32 லட்சம்)
விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதற்குமுன்பு 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில்
அதிகபட்சமாக 2.71 லட்சம் விண்ணப்பங்களே பெறப்பட்டது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்
குழுமம் நடத்திய பொதுத் தேர்வில் முதன் முறையாக திருநங்கைகள் மூன்றாம்
பாலினப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.
21-5-2017 (ஞாயிறு) அன்று சென்னை உள்பட 32
மாவட்ட தலைநகரங்களில் 410 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இதில் 4.82 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள்.
எழுத்துத் தேர்வு முடிவுகள் www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் (நேற்று) வெளியிடப்பட்டது.
உடல்கூறு அளத்தல் - உடல்தகுதி தேர்வு - உடற்திறன் போட்டிகள் ஆகியவை அடுத்தகட்ட தேர்வுகள் ஆகும்.
இரண்டாம்கட்ட தேர்வுக்கு தேர்வானவர்கள்
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இக்குழுமத்தின் மேற்கூறிய இணையதள
முகவரியிலிருந்து 12-7-2017 முதல் தங்களது சேர்க்கை எண் மற்றும் பிறந்த
தேதி ஆகியவற்றைக் கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்
விவரம் வெளியிடப்படமாட்டாது. இரண்டாம்கட்ட தேர்வுக்கு தேர்வு
செய்யப்படாதவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை சேர்க்கை எண் மற்றும்
பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டு 12-7-2017 முதல் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்தகட்ட தேர்வுகளான உடல்கூறு அளத்தல் -
உடல்தகுதி தேர்வு- உடற் திறன் போட்டிகள் இந்த மாதம் இறுதி வாரத்தில்
தமிழ்நாடு முழுவதும் 15 மையங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி உடல்கூறு
அளத்தல் - உடல்தகுதி தேர்வு - உடற் திறன் போட்டித் தேர்வில்
விண்ணப்பதாரர்கள் நடைமுறையில் உள்ள விதியின்படி 1:5 என்ற விகிதாசாரத்தில்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








