பிளஸ் 2 துணை தேர்வு செப்., 25ல் துவக்கம்
'பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு, செப்., 25ல் துவங்கும்' என,
தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. பள்ளியில், தற்போது படிக்கும் மாணவர்களை
தவிர, ஏற்கனவே படித்து தேர்ச்சி பெறாதோர் மற்றும் நேரடியாக, பிளஸ் 2 பொதுத்
தேர்வு எழுதுவோருக்கும், தனித் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு, செப்., 25ல், பிளஸ் 2 தனித் தேர்வு துவங்கி, அக்., 10 வரை
நடக்கும். தேர்வு விபரங்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள்
மற்றும் அரசு பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் பங்கேற்க
விரும்புவோர், இன்று முதல், வரும், 31 வரை, அரசு தேர்வுத் துறை சேவை
மையங்களுக்கு நேரில் சென்று,விண்ணப்பிக்க வேண்டும். வரும், 25 மற்றும் 27ம்
தேதிகளில், விண்ணப்பிக்க முடியாது. 'தேர்வு அட்டவணை விதிகள், சேவை மைய
விபரங் களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என,
அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.