துணைத் தேர்வு விடைத்தாள் நகல் : இன்று பதிவிறக்கம் செய்யலாம்
மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று காலை 11 மணி முதல் அரசுத் தேர்வுத்துறை இணைய தளமான scan.tndge.inல் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணைய தள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பில் கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.








