ஒரு பிளாஸ்டிக் பாட்டில் இயற்பியல் ஆசிரியர் கையில் கிடைத்தால் அதை
வைத்து மிதத்தலின் விதியை நிருபிக்க முயல்வார். அதுவே ஒரு ஆங்கில ஆசிரியர்
கையில் கிடைத்தால் வகுப்பறையின் பல்வேறு இடங்களில் வைத்து preposition
சொல்லிக்கொடுக்க முயலுவார். ஒரு கணக்கு ஆசிரியரிடம் பாட்டில் கிடைத்தால்
அவர் அந்த பாட்டிலின் கன அளவை கண்டுபிடிப்பதற்கு முயலுவார். தமிழ்
ஆசிரியரிடம் கேட்டால் பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி கவிதை எழுத
கற்றுக்கொடுப்பார். சமூக அறிவியல் ஆசிரியரிடம் பிளாஸ்டிக் பாட்டில்
கிடைத்தால் பாட்டில் மூலம் பழங்காலத்தில்
செய்திகளை கடல் வழியாக எப்படி பரிமாறிக் கொண்டனர் என்பதை விளக்குவார்.
வீட்டில் இருக்கும் பாட்டியிடம் பிளாஸ்டிக் பாட்டில் கிடைத்தால் அதை
குவளையாக பயன்படுத்துவார்.
பொருள் ஒன்றாக இருந்தாலும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மதிப்பு மாறுகின்றன. இலவசமாக கிடைக்கும் போது கூட அதன் மதிப்பு மாறுகிறது.
திருமண வீடுகளில் ஐஸ்கிரீம் கொடுக்கும் போது அதன் கப்பை
பார்த்திருக்கிறீர்களா? அந்த கப்பின் அடிப்பகுதியை பார்த்திருந்தால்
உங்களுக்கு தெரிந்திருக்கும். கப்பின் அடிப்பகுதிக்கும் தரைக்கும்
இடையேயுள்ள தூரம் கடைகளில் வாங்கும் மற்ற ஐஸ்கிரீம் கப்பினை விட அதிகமாக
இருக்கும். குறைந்த அளவு ஐஸ்கிரீமை அந்த கப்பில் விட்டாலே கப்பானது
நிறைந்து விடும். கல்யாண வீட்டில் வழங்கப்படும் 50 மிலி ஐஸ்கிரீம் கப்பில்
நிச்சயமாக 50 மிலி இருக்காது. இலவசமாக கொடுக்கும் போது யாரும் கேள்வி
கேட்கமாட்டார்கள் என்று நினைத்து அவர்கள் இதை செய்கிறார்கள். அதே ஐஸ்கிரீம்
கப் கடையில் விற்க்கப்படும் போது அதன் மதிப்பு நிச்சயமாக 50 மிலி
இருக்கும். விற்கும் இடத்தைப் பொறுத்து ஐஸ்கிரீமின் மதிப்பு மாறுகிறது.
கணினியில் வெறும் தட்டச்சு செய்து அதை ஒரு தட்டச்சு எந்திரமாக பயன்படுத்தலாம். அதே கணினியை ஆராய்ச்சி கூடமாகவும் பயன்படுத்தலாம். கணினி ஒன்று தான் இருக்கும் இடம் பொறுத்து மதிப்பு மாறுகிறது.
விலை உயர்ந்த அலைப்பேசியை மாதம் தோறும் வீடியோ பார்த்து டேட்டாவுக்கான பணத்தை இழப்பதற்கு பயன்படுத்தலாம். அதே அலைப்பேசியை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கவும் செய்யலாம். இருக்கும் இடத்தை வைத்து கைப்பேசிக்கு மதிப்பு.
நாம் பயன்படுத்துவதை பொறுத்து தான் பொருட்களின் மதிப்பு பெறுகின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...