நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு சுவிஸ் நாட்டு கணிதவியல் அறிஞர் மரினா வியாசோவ்ஸ்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சுவிஸ் பெடரல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த முனைவர் மரினா வியாசோவ்ஸ்கா 2017 ஆம் ஆண்டுக்கான சாஸ்த்ரா ராமானுஜன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கணிதவியலில் மிகச் சிறந்த திறன் படைத்தவர். எண் கோட்பாடுகளில் பல தீர்வுகளை ஏற்படுத்தியவர். இப்போது, எண் கோட்பாட்டில் புதிய சாதனை படைத்துள்ள அவருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கணிதவியலில் சாதனை படைக்கும் இளம் கணிதவியலாளர்களுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்கப்படுகிறது. கணித மேதை ராமானுஜன் தனது 32 ஆண்டுகால வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் படைத்ததைக் கருத்தில் கொண்டு சாதனைப் படைக்கும் 32 வயதுக்குள்பட்ட கணிதவியலாளர்களுக்கு 2005 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
விருது குழுவில் புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் அல்லாடி கிருஷ்ணசுவாமி தலைமையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6 கணிதவியல் அறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நிகழாண்டு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் வளாகத்தில் வருகிற டிச. 21, 22-ம் தேதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச எண் கோட்பாடு தொடர்பான கருத்தரங்கத்தில் மரினா வியாசோவ்ஸ்காவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.