இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான மிலாது நபி தமிழகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படவிருந்தது. அரசு தலைமை ஹாஜியின் கோரிக்கை காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு நவம்பர் 20 ஆம் தேதி அறிவித்தது.
முன்னதாக தமிழகத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக நவம்பர் 3 ஆம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் நவம்பர் 4 ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் நவம்பர் 19ஆம் தேதி யுபிஎஸ்சி தேர்வுகள் நடக்கவிருந்ததால் அண்ணா பல்கலை தேர்வுகள் நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








