ஒக்கி புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு ரூ.133 கோடி இடைக்கால நிவாரண நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 27 December 2017

ஒக்கி புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு ரூ.133 கோடி இடைக்கால நிவாரண நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு :

ஒக்கி புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு ரூ.133 கோடி இடைக்கால நிவாரண நிதி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி:

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காணாமல் போனதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19-ம் தேதி கன்னியாகுமரி வந்தார். அவரை தமிழக கவர்னர் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதன் பின்னர், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் புயல் பாதிப்பை பிரதமரிடம் விளக்கினர். தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி கோரி பிரதமரிடம் கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். அதில், புயல் நிவாரணமாக ரூ.4,047 கோடி ஒதுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட டெல்லியில் இருந்து அதிகாரிகள் குழு இன்று சென்னை வந்தடைந்தது. நாளை அவர்கள் கன்னியாகுமரிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், ஒக்கி பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 133 கோடி ரூபாயை மத்திய அரசு இன்று ஒதுக்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H