இன்றைய சூழ்நிலையில் ‘கல்யாணமே வேண்டாம்’
என்று ஒருசாராரும், ‘கல்யாணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழலாம்’ என்று
இன்னொரு சாராரும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
விரைவாகவே பெண்கள் திருமணம்
செய்துகொண்ட காலம் ஒன்று இருந்தது. அதனால் ‘சீக்கிரம் திருமணம்
செய்துகொள்வது, பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல’ என்று கூறவேண்டிய
கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அடுத்து பெண்கள் வெகுகாலம் திருமணத்தை
தள்ளிப்போட்டனர். அதனால் ‘முதிர்கன்னிகளாகும் நிலையை மாற்ற சரியான வயதில்
திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் நிலை உருவானது.