சென்னை தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் குளிர்
நிலவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கததில்
எச்சரித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தின்
வட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும், நாளையும் இரவு
நேரங்களில் கடும் குளிர் நிலவும். இந்த சீசனிலேயே மிகவும் குறைந்த பட்ச
செல்சியஸ் என்ற அளவுக்குகூட குளிர் இருக்கும்.
குறிப்பாக
கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருத்தனி, அரக்கோணம் பகுதி, நாமக்கல்,
சேலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் குளிர் நிலவும். பெங்களூரின் சில
பகுதிகள், மைசூர் நகரிலும் தொடர்ந்து கடும் பனி நிலவும். கடந்த ஒரு வாரமாக
உதகையில் 4முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு இருந்து வருகிறது.
கோவைமாவட்டம்
வால்பாறையிலும் 6 முதல் 7 டிகிரி செல்சியஸ் இருந்து வருகிறது. சென்னையைப்
பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு 20 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு சற்று
அதிகமாக இருக்கும். அதேசமயம் சென்னையின் புறநகர் பகுதிகளில் 17 முதல் 18
டிகிரி செல்சியஸ் அளவுக்கு இரவு நேரங்களில் வெப்ப நிலை இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.