☀தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 12-வது மாநிலத் தேர்தல் இன்று (04.03.2018) புதுக்கோட்டையில் நடைபெற்றது.
☀மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர், STFI பொதுக்குழு உறுப்பினர் ஆகிய 5 பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. மற்ற பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
☀இந்த 12-வது மாநிலத் தேர்தலானது, ஆசிரிய இயக்க வரலாற்றில் மாநிலத் தலைமைப் பொறுப்பிற்கு பெண் தோழர் ஒருவரை முதன் முதலாகத் தேர்வு செய்திட்ட சிறப்பைப் பெற்றது.
☀இன்று மண் முதல் விண் வரை பெண்கள் சாதனைகள் பல புரிந்து கொண்டிருக்கும் நிலையில், ஆசிரிய சமுதாயத்தின் உரிமைகளை மீட்டுக் கொணரும் களத்திற்கும், போராளிப் பாசறையின் தலைமைப் போராளியாக முன்னின்று வழிநடத்தும் பொறுப்பினை பெண் தோழருக்கு அளித்துள்ளது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
☀மேலும், மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் பொறுப்புகளிலும் 43% பெண் தோழர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
☀மக்களாட்சி மாண்போடு நடைபெற்ற தேர்தலில் பின்வரும் தோழர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
⚡மாநிலத் தலைவர் :
தோழர் மூ.மணிமேகலை
⚡மாநிலப் பொதுச்செயலாளர் :
தோழர் ச.மயில்
⚡மாநிலப் பொருளாளர் :
தோழர் க.ஜோதிபாபு
⚡துணைப் பொதுச்செயலாளர் :
தோழர் த.கணேசன்
⚡STFI பொதுக்குழு உறுப்பினர் :
தோழர் ச.மோசஸ்
⚡மாநிலத் துணைத் தலைவர்கள் :
1. தோழர் பெ.அலோசியஸ் துரைராஜ்
2. தோழர் ரா.மலர்விழி
3. தோழர் ஆர்.தமிழ்செல்வி
4. தோழர் அக்சல்யா மெர்லின் உஷா
5. தோழர் தோ.ஜான் கிறிஸ்து ராஜ்
6. தோழர் தே.ஜோசப் ரோஸ்
7. தோழர் அ.ரகீம்
⚡மாநிலச் செயலாளர்கள் :
1. தோழர் டி.மல்லிகா
2. தோழர் எஸ்.சித்ரா
3. தோழர் வெ.ஹேமலதா
4. தோழர் சோ.முருகேசன்
5. தோழர் இ.வின்சென்ட்
6. தோழர் பிரசன்னா
7. தோழர் தே.முருகன்









