Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நோபல் பெற்ற உயிரியலாளரும், கல்வியாளருமான- டேவிட் பால்டிமோர் (David Baltimore) பிறந்த தினம்.
🗾 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1938) பிறந்தார். பள்ளிப் பருவத் தில் கணிதத்தில் சிறந்து விளங்கி னார். உயர்நிலைப் பள்ளிப் பருவத் தில் ஜாக்சன் நினைவு ஆய்வுக்கூடத்தின் உயிரியல் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது இவரது ஆர்வம் அறிவியல் பக்கம் திரும்பியது.
🗾 உயிரியல், வேதியியல் பாடங் களை ஸ்வார்த்மோர் கல்லூரியில் கற்றார். 1960-ல் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே, கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
🗾 மூலக்கூறு உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டார்.
🗾 மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்ஐடி) உயிரி இயற்பியல் பயின்றார்.
🗾 1964-ல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1965-ல் சால்க் உயிரியல் கல்வி நிறுவனத்தில் இணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.
🗾 எம்ஐடி பேராசிரியராக 1972-ல் நியமிக்கப்பட்டார். புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.
🗾 வைரஸ்களின் அமைப்பு, வைரல் ஆர்என்ஏ தொகுப்புகள், வைரஸ்களின் சுய இனப் பெருக்கம், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு களில் அவற்றின் தாக்கம் ஆகியவை குறித்து ஆராய்ந்தார்.
🗾 நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் புரோட்டீன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டறிவதற்கான ஆராய்ச்சிக் குழுவில் முக்கிய பங்காற்றினார்.
🗾 வைரஸ் வகைகள் மற்றும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளுக்காக உடல் இயங்கியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை ஹோவர்டு எம்.டெமின், ரெனட்டோ டல்பெக்கோ ஆகியோருடன் இணைந்து 1975-ல் பெற்றார்.
🗾 மாணவர்களுக்காக ஏராளமான கருத்தரங்குகள் நடத்தி அவர்களது கற்கும் திறனை மேம்படுத்தினார். மாணவர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிநடத்தினார். 1997-ல் கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஸ்டெம்செல் ஆராய்ச்சிகளை ஆதரித்தார்.
🗾 அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத் தலைவராக 2007-ல் நியமிக்கப்பட்டார். எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம்செல்களை மரபணு மாற்ற தொழில்நுட்ப உதவியுடன் ஹெச்ஐவி வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் பி-செல்களாக மாற்ற முடியும் என 2009-ல் நிரூபித்தார்.
🗾 இவரது இந்த ஆய்வு முனைப்பை அடிப்படையாகக் கொண்டு உயிரணு மருந்து தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யக்கூடிய பி-செல்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளும் நடக்கின்றன.
🗾 குழந்தைகளைத் தாக்கும் என்சைம் குறைபாட்டு நோய் சிகிச்சைக்கும் இது பயன்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
🗾 ‘குஸ்டவ் ஸ்டென்’, ‘வாரன் ட்ரையனியல்’, ‘கெயிர்டனர்’, ‘எல்லி லில்லி’ உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றார். அமெரிக்காவின் உயரிய அறிவியல் விருதான ‘நேஷனல் மெடல்ஸ் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ விருது 2000-ல் இவருக்கு வழங்கப்பட்டது.
🗾 நோய் எதிர்ப்பியல், நச்சு உயிரியல், புற்றுநோய் ஆய்வு, உயிரித் தொழில்நுட்பம், டிஎன்ஏ என பல்வேறு துறைகளில் மகத்தான பங்களிப்பை டேவிட் பால்ட்டிமோர் வழங்கியுள்ளார். 78 வயதாகும் இவர், பல அறிவியல் அமைப்புகளில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
🗾🗾🗾🗾🗾🗾🗾🗾🗾
🙏 க. ஜெய்சீலன், அறிவியல் ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப் பள்ளி, பெத்லேகம்-ஆம்பூர், வேலூர்-மாவட்டம்
📲செல்:8122121968🙏
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








