கணிதம் படிக்க வேண்டுமா? ‘‘கணிதம் படிக்கிறவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கணிதம் படிக்க வேண்டுமா? ‘‘கணிதம் படிக்கிறவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கு சமமாக கணிதம் படித்தவர்கள் சம்பாதிக்க முடியும்.
 ஆர்வமும் ஈடுபாடும் மிக அவசியம்.
இளங்கலையில் கலைக் கல்லூரிகளில் பி.எஸ்சி. மேத்ஸ் என்றும் சில பல்கலைக்கழகங்களில் பி.ஏ. மேத்தமேட்டிக்ஸ் என்றும் மூன்று வருடப் படிப்பாக வழங்கப்படுகிறது.
இளங்கலையில் சேர பிளஸ் டூவில் தேறியிருக்க வேண்டும். கணிதப் பாடத்தைப் படித்திருக்க வேண்டும். இவை தவிர, பல புதிய படிப்புகளும் இருக்கின்றன. பி.எஸ்சி. ஃபைனான்ஷியல் மேத்ஸ், பி.எஸ்சி.


இண்டஸ்ட்ரியல் மேத்ஸ், பி.எஸ்சி. நியூமெரிக்கல் மேத்ஸ், பி.எஸ்சி. மேத்தமேட்டிக்கல் எகனாமிக்ஸ்... இப்படி. தமிழகத்தில் நியூமெரிக்கல் மேத்ஸ் மட்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. மற்றவை பூனா, மகாராஷ்டிரா, இந்தூர் ஆகிய மாநிலங்களில் கற்றுத்தரப்படுகின்றன. ‘இந்தியன் ஸ்டேட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட் - பெங்களூரு’வில் பேச்சலர் ஆஃப் மேத்ஸ் (B.Maths), மாஸ்டர் ஆஃப் மேத்ஸ் (M.Maths) என்ற கோர்ஸுகளாக கிடைக்கின்றன. கான்பூர் ஐ.ஐ.டி.யில் ‘இன்டகிரேட்டட் எம்.எஸ்சி. மேத்ஸ்’ என்று ஐந்து வருடப் படிப்பாக கற்றுத்தரப்படுகிறது.

இதில் சேர, ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதித் தேர்வாக வேண்டும். கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் ‘பிசினஸ் ஸ்டேட்டிஸ்டிக்ஸ்’, ‘பயோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ்’ என்ற கணிதத்துக்கான சிறப்புப் படிப்புகள் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘அப்ளைடு ஸ்டேட்டிஸ்டிக்ஸ்’ என்ற கணிதம் தொடர்பான படிப்பு இருக்கிறது. மும்பை, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்சில், எம்.எஸ்சி. மற்றும் பி.எச்டி. இன்டகிரேட்டட் கோர்ஸாக வழங்கப்படுகிறது. சென்னை மேத்தமேட்டிக்கல் இன்ஸ்டிடியூட்டில் பி.எஸ்சி. (ஹானர்ஸ்) இன் மேத்தமேட்டிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்சி. (ஹானர்ஸ்) மேத்தமேட்டிக்ஸ் அண்ட் பிசிக்ஸ் படிப்புகளாக வழங்கப்படுகின்றன.

முதுகலையில் எம்.எஸ்சி. இன் மேத்தமேட்டிக்ஸ், எம்.எஸ்சி. இன் அப்ளிகேஷன்ஸ் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ் படிப்புகளாக கற்றுத்தரப்படுகின்றன. இந்நிறுவனத்தில் சேர நுழைவுத் தேர்வு எழுதி பாஸாக வேண்டும். அப்படித் தேறினால், படிப்பதற்கு இளங்கலைப் படிப்புக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாயும், முதுகலைக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாயும், பி.எச்டி.க்கு மாதம் 16 ஆயிரம் ரூபாயும் ஸ்காலர்ஷிப்பாக கிடைக்கும். இந்திய அளவில் கணிதம் கற்க முதல் நான்கு ரேங்குகளில் இருக்கும் நிறுவனங்கள்... ‘டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச்’, மும்பை, ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் மேத்தமேட்டிகல் சயின்ஸஸ்’, சென்னை, (இதில் சேர நேஷனல் போர்ட் ஃபார் ஹையர் மேத்தமேட்டிக்ஸ் (NBHM) என்ற நுழைவுத் தேர்வு எழுதி பாஸாக வேண்டும்), ‘ஹரீஷ் சந்திரா ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’, அலகாபாத், ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச்’, சென்னை.

கணிதம் படித்தால் மத்திய, மாநில அரசு நிறுவனங்களிலும் கூகுள், ஐ.பி.எம். போன்ற பெரிய நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்  . ஐ.எஸ். ஆர்.ஓ., நேஷனல் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் போன்ற ஆய்வு நிறுவனங்களிலும் பணி கிடைக்கும். கணிதம் படித்தவர்களுக்கு இன்வெஸ்ட்மென்ட் அனலிஸ்ட், ஆபரேஷனல் ரிசர்ச் சயின்டிஸ்ட், ஸ்டேட்டிஸ்டிஷியன், ஃபைனான்ஷியல் ரிஸ்க் அனலிஸ்ட், கார்பரேட் இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்ஸ், சார்ட்டர்டு சர்டிஃபைடு அக்கவுன்டன்ட் என விதவிதமான பணிகள் காத்திருக்கின்றன. பொதுவாக பி.எஸ்சி. படிக்க வருடத்துக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். எம்.எஸ்சிக்கு வருடத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H