கற்றது கையளவு கல்லாதது கடலளவு என்று கூறுவார்கள். ஏனெனில் நாம் இந்த உலகையே அறிந்தாலும், அந்த மாபெரும் பிரபஞ்சத்தில், நாம் கற்றுக் கொண்டது ஒரு சிறு புள்ளி தான் என்பதை நம் அனைவராலுமே மறுக்க முடியாது.நமது உலகில் கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்கா, ஆசியா, அண்டார்டிகா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற கண்டங்கள், கடல்களை தன்னுடைய எல்லையாக கொண்டிருக்கிறது. இதனால் தான் அதற்கு கண்டம் என்று பெயர் வந்தது.
ஆப்ரிக்கா:ஆப்ரிக்காவில், "ஆப்ரி" என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். எனவே அங்கு ஆப்ரி இனத்தவர் வாழ்ந்த இடம் என்பதால், ஆப்ரிக்கா என்ற இந்த கண்டத்திற்கு பெயர் வந்தது.
அண்டார்டிகா:
அண்டார்டிகா என்ற கிரேக்க சொல்லிற்கு, வடக்கு திசைக்கு எதிரானது என்று பொருளாகும். எனவே புவியின் தெற்கு பகுதி நுனியில் அண்டார்டிகா அமைந்துள்ளதால், இதற்கு அண்டார்டிகா என்று பெயர் வந்தது.
ஆஸ்திரேலியா:
லத்தீன் மொழியில் ஆஸ்திரேலிஸ் என்றால் தெற்கில் உள்ள தெரியாத பகுதி என்று பொருளாகும். எனவே பண்டைய ரோமானியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆஸ்திரேலியா செல்ல வழி கண்டறியப்படாத காரணத்தால், ஆஸ்திரேலிஸ் என்று கூறினார்கள். பின் காலப்போக்கில் அது ஆஸ்திரேலியா என்று கூறப்பட்டது.
ஆசியா:
ஏஜியா என்னும் கிரேக்க சொல்லானது, கி.மு 400-களில் இருந்து ஏஜியன் கடலின் கிழக்கு பகுதியில் வாழ்ண்டு வந்த மக்களின் பழக்கத்தால், காலப்போக்கில் உலகமெங்கும் ஆசியா என்று பெயர் ஏற்பட்டது.
ஐரோப்பியா:
யூரோப் என்ற சொல்லில் இருந்து யூரோப்பா என்று மருவியது. பின் கிரேக்க புராணங்களில் கூறப்படும் ஜீயுஸ் என்பவர் கதவுகளுக்கும், மனிதர்களுக்கும் தந்தையாக கருதப்படுவதாக அறியப்படுகிறது.
எனவே இவரின் காதலிகளில் ஒருவராக யூரோப்பா என்பவர் இருந்துள்ளார். இதனால் ஜீயஸ் யூரோப்பாவை ஒரு வெள்ளை எருதின் இருந்து வந்து ஈர்த்து சென்றது என்று சில தகவல்கள் கூறப்பட்டது. எனவே இவரது பெயரே இந்த கண்டத்திற்கு, ஐரோப்பா என்று பெயர் ஏற்பட காரணமாக இருந்தது.
அமெரிக்கா:
அமெரிக்கோ வெஸ்புகி என்ற ஒரு நபரின் பெயர் தான் இந்த கண்டத்திற்கு அமெரிக்கா என்று பெயர் வருவதற்கு காரணமாக இருந்தது.








