ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்குஎம்டிஆர் கட்டணம் விதிக்கப்பட மாட்டது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதற்கான வணிகத் தள்ளுபடிக் கட்டணம் (எம்டிஆர்) வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணத்தை இந்தியன் ரயில்வே தள்ளுபடி செய்துள்ளது.
அரசாங்கப் பரிவர்த்தனைகளில் மக்களுக்குப் பயன் இருக்க வேண்டும். மக்கள் அரசாங்கத்துக்கு பணம் செலுத்துகையில், அவர்கள் எம்டிஆர் கட்டணத்தை எதிர்கொள்ளக் கூடாது. மேலும், இந்தியன் ரயில்வே டிக்கெட்டுகளில் உள்ளூர் மொழிகளை அச்சிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கன்னட மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2 முதல் கர்நாடகாவின் அனைத்துப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது








