என் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே.- வங்கி கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு பேச்சு - - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


என் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே.- வங்கி கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு பேச்சு -

வந்தவாசி. ஏப்.21. வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற
உலகப் புத்தக தின விழா சிறப்பு புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில், நான் படித்த
புத்தகங்களே என் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தன என்று தமிழ்நாடு
மெர்க்கண்டெல் வங்கி கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு பேசும்போது குறிப்பிட்டார்.
இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். 
விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார். 
நூலகர் க.மோகன் முன்னிலை வகித்தார். 

         உலகப் புத்தகத் தின விழாவையொட்டி வந்தவாசி அரசுக் கிளை நூலக வளாகத்தில்
அமைக்கப்பட்ட சிறப்புப் புத்தகக் கண்காட்சியை  தமிழ்நாடு மெர்க்கண்டெல் வங்கி வந்தவாசி 

கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு  திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை இராமலிங்கம் 

அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

          சிறப்புப் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்த  தமிழ்நாடு மெர்க்கண்டெல் வங்கி வந்தவாசி 

கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு பேசும்போது, "சிறுவயதிலேயே புத்தகம் படிக்கிற ஆர்வத்தை எனது

தந்தையார் மூலமாக நான் பெற்றேன். நேரங்கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன்.
இன்றைக்கு நான் ஒரு வங்கியின் கிளை மேலாளராக உயர்ந்து நிற்பதற்கு காரணம் நான் படித்த
புத்தகங்களே. புத்தகங்கள் மூலமாக நமது குழந்தைகளுக்கு சமுதாயம் குறித்த அறிவையும், உலகம் குறித்த
ஞானத்தையும் வழங்க முடியும். குறைந்த செலவில் நிறைந்த பயனை அளிப்பவை என்ரும் புத்தகங்களே.
           நாம் அனைவரும் மகிழ்வோடு கொண்டாட வேண்டிய ஒரு தினமாக உலகப் புத்தகத் தினம் இருக்கிறது.
இந்த தினம் நம் வாழ்வின் உயர்விற்கு வழி அமைக்கும் புத்தகங்களைக் கொண்டாடும் தினம். நாமும் புத்தகங்களைப் 
படிப்போம். நம் குழந்தைகளிடமும் நல்ல புத்தகங்களை வாங்கி அறிமுகம் செய்வோம்" என்று குறிப்பிட்டார்.    

         விழாவில், ரூ.1000/- செலுத்தி, நூலகத்தின் 184 மற்றும் 185-ஆவது நூலகப் புரவலராக இணைந்த 

கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு, தீபம் மொபைல்ஸ் எம்.ரமேஷ் ஆகியோருக்கு பாராட்டுச் செய்யப்பட்டது.

           உலகப் புத்தகத் தின சிறப்புப் புத்தகக் கண்காட்சியில் கலை, இலக்கியம், சமுதாயம், அறிவியல், வரலாறு குறித்த
200-க்கும் மேற்பட்ட தலைப்பிலான நூல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சி தினமும் காலை 9 மணிமுதல் 
மாலை 6 மணிவரை நூலகத்தில் வரும் ஏப்ரல்.28-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில்
வாங்கப்படும் நூல்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது 

          நிகழ்வை நூலக உதவியாளர் பு.நாராயணன் ஒருங்கிணைத்தார். நிறைவாக, நூலகர் ஜா.தமீம் நன்றி
கூறினார். 
    படக்குறிப்பு :

     வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலகப் புத்தகத் தின விழா
சிறப்புப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு மெர்க்கண்டெல் வங்கி வந்தவாசி கிளை மேலாளர் இரா.ராஜன் பாபு 
திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அருகில், முதல் விற்பனையைத் தொடங்கிவைத்த, இராமலிங்கம் அன்
கோ உரிமையாளர் இரா.சிவக்குமார், நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ்,  
கிளை நூலகர் பூ.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H