பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன், அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் சிறுபான்மை மொழி ஆசிரியர்
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கசவகட்டா கிராமத்தில், தனியார்
பள்ளியின் திறப்புவிழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத்
தெரிவித்தார்.







