திண்டுக்கல்: இன்று ரம்ஜான் விடுமுறை
என்பதால் நாளை (ஜூன் 17) ஞாயிறன்று ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு
கலந்தாய்வு நடந்து வருகிறது.கலந்தாய்வு பட்டியலில்ஜூன் 15ம் தேதி ரம்ஜான்
விடுமுறை அறிவித்து 16 ம் தேதி பொது மாறுதல் கலந்தாய்வு பட்டியல்
தயாரிக்கப்பட்டிருந்தது. நேற்று 15 ம் தேதி ரம்ஜான் கொண்டாட்டம்
இல்லாததால், நேற்று விடுமுறை ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் செயல்பட்டன.
ஆசிரியர் கலந்தாய்வு நடக்கவில்லை. இன்று 16 ம் ரம்ஜானை முன்னிட்டு பொது
விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெற வேண்டிய முதுகலை
ஆசிரியர், தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நாளை
(ஜூன் 17 ) ஞாயிறு காலை நடத்த கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், அனைத்து
முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.