வேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி!

ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள உதவி மேலாளர் (சட்டம்) பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பிஎல் (அல்லது) எல்எல்பி படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 24 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.708/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2018.
மேலும் விவரங்களுக்கு http://repcobank.com என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.